சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய உத்தரிய மாதா அன்னையர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கார்மேல் அன்னை திருவிழா ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அன்றைய தினம் காலை பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து மதிய தோழமை உணவும் இடம்பெற்றன.
தோழமை உணவு நிறைவில் அன்னையர்களுக்கான ஒன்றுகூடல், விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள் என்பன நடைபெற்றன.
இந்நிகழ்வில் அன்னையர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

