முழங்காவில் பல்லவராயன்கட்டு 19ஆம் கட்டை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

03ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 04ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்றின் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அன்பக நிறுவன இயக்குனர் அருட்தந்தை செலஸ்ரின் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin