பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆனி மாதம் 24ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை பேராலய உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் ஹில்ரன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை குருநகர் பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் எமில்டன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.
அத்துடன் பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும் ஆனி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 24 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

