யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆனி மாதம் 23ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை 412 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
32 நாட்கள் இடம்பெற்ற மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் நிறைவில் 412 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 409 என்புத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அகழாய்வின்போது சிறு பாசிமணி துண்டு, கை வளையல், ஆணிகள், பிளாஸ்ரிக், பாரிய உலோக துண்டு போன்ற பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இவ்அகழ்வுப் பணிகள் வருகின்ற ஆடி மாதம் 15ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

