சமூகதொடர்பாடல் ஆண்டு சிறப்பு கருத்தமர்வு புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் காலை திருப்பலியும் தொடர்ந்து கருத்தமர்வும் நடைபெற்றது.
அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் மற்றும் யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர் திரு. ஜெகன் கரன்சன் ஆகியோர் இணைந்து பங்குமக்களுக்கான கருத்தமர்வையும் மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளையும் முன்னெடுத்தனர்.
குழுவிளையாட்டுக்கள், கருத்துரைகள், குழு ஆய்வுகள், கலந்துரையாடல், விழிப்புணர்வு பட காட்சிப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்நிகழ்வில் 130ற்கும் அதிகமான பங்குமக்களும் மறைக்கல்வி மாணவர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

