தீவகம் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 20ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

11ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை குருநகர் பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் எமில்ரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா அன்று மாலை புனிதரின் திருச்சொருப தேர்ப்பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin