யாழ். மறைமாவட்ட குருவும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளரும் உருவாக்குநருமான அருட்தந்தை மங்களராஜா அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 11ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை பெற்றுஸ் தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை மங்களராஜா அவர்களின் தலைமையில் கல்லூரி சிற்றாலயத்தில் நன்றித்திருப்பலியும் தொடர்ந்து அருட்தந்தைக்கான கௌரவிப்பும் அருட்தந்தை அவர்களால் எழுதப்பட்ட யாழ்ப்பாணம் மன்னார் மறைமாவட்ட திருஅவை வரலாற்று குறிப்புக்கள் உள்ளடங்கிய – யாழ். மன் திருஅவை வரலாற்று பதிவுகள் சில – நூல் வெளியீடும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், குருக்கள், துறவிகள், இறைமக்கள், அருட்தந்தையின் குடும்ப உறவினர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin