நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை தியான ஆற்றுகை பங்குனி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் பங்குமக்களால் “மீட்பின் குருதி” என்னும் தொனிப்பொருளில் சிலுவைப்பாதை நிலைகள் ஆற்றுகை செய்யப்பட்டு தியானம் நடைபெற்றது.

புனித பரலோக அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி புனித நீக்கிலார் ஆலயத்திற்கு சென்று அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்த இத்தியானத்தில் பங்குமக்கள், அயற்பங்குமக்கள், பிற சமய மக்களென ஆயிரக்கணக்கானோர் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin