கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக அங்கத்தவர்கள் மற்றும் மல்லாவி பங்கு மறைப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கான தவக்கால யாத்திரைத் தியானம் பங்குனி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநரும் மல்வாவி பங்குத்தந்தையுமான அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் பங்கேற்பாளர்கள் வவுனிக்குளம் கல்வாரிப்பூங்காவிற்கு யாத்திரை மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற சிலுவைப்பாதை, திருப்பலி, நற்கருணை வழிபாடு என்பவற்றில் பங்குபற்றினர்.
திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை யூயின் அமல்ராஜ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் நற்கருணை வழிபாட்டை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்புராசா அவர்கள் நெறிப்படுத்தினார்.
இத்தியானத்தில் 75ற்கும் அதிகமானவர்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

