யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தும்பளை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் இளையோரால் “சிலுவையோடு பயணம்” எனும் மையக்கருத்தில் சிலுவைப்பாதை நிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு தியானம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin