ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் விண்ணக வாழ்வின் ஐந்தாம் ஆண்டு நிறைவு மற்றும் தவக்காலத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டம் வேப்பங்குளம் பங்கு வளன் ஒளி ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு சித்திரை மாதம் 01ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற இவ்இரத்ததான நிகழ்வை வவுனியா மறைக்கோட்ட முதல்வரும் இறம்பைக்குளம் பங்குதந்தையுமான அருட்தந்தை விக்ரர் சோசை அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வில் 32 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

By admin