அருகிவரும் கிறிஸ்தவ கலைகளை பாதுகாத்து அவற்றை வளர்க்கும் நோக்கோடு இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட தமிழ்மொழி மூலமான பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி புலம்பல் பாடல் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.
யாழ். மறைமாவட்டத்திலிருந்து 22 அணிகளும் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து 10 அணிகளும் பங்குபற்றிய இப்போட்டியில் மன்னார் மறைமாவட்டம் நானாட்டான் புனித கார்மேல் அன்னை ஆலய பங்கு முதலாமிடத்தையும் முருங்கன் புனித யாகப்பர் இளையோர் அணி இரண்டாமிடத்தையும் வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலய அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டதுடன் யாழ். மறைமாவட்ட குருநகர் புனித யாகப்பர் ஆலய மறைப்பாடசாலை அணி ஆறாமிடத்தையும் மல்வம் பங்கு அணி எட்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

