அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் புதிய நிர்வாகத்தெரிவு பங்குனி மாதம் 25ஆம் திகதி கடந்த புதன்கிழமை இந்தியா பெங்களுரில் நடைபெற்றது.
இத்தேர்வில் அருட்சகோதரி நிர்மலினி அவர்கள் உயர் மேலாளராகவும் இலங்கை நாட்டை சேர்ந்த அருட்சகோதரி பிரதீபா அவர்கள் செயலாளராகவும் அருட்சகோதரி சீனா கிறஸ்ரா அவர்கள் பொருளாளராகவும் அருட்சகோதரிகள் அன்சிலா, சமித்தா, நெசா, றஸ்மி ஆகியோர் ஆலோசகர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
