யாழ். மறைமாவட்ட துறவற சபை குருக்கள் துறவிகளுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை திருவுள சபை சிறிய குருமடத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட துறவற சபை குருக்கள் துறவிகள் மன்ற தலைவர் திருவுள பணியாளர் சபை அருட்தந்தை பிராங் டவ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தியான உரை, நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பன இடம்பெற்றன.

தியான உரையை மன்னார் உயிலங்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்ல இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட் அவர்கள் வழங்கியதுடன் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வரும் மன்ற போஸகருமான அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் 100ற்கும் அதிகமான குருக்கள் துறவிகள் பங்குபற்றினர்.

By admin