பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது.
மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் வழிநடத்தலில் இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை, ஆன்மீக உரை, நற்கருணை வழிபாடு, திருப்பலி என்பன இடம்பெற்றன.
தியானத்தை கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்கள் நெறிப்படுத்தியதுடன் திருப்பலியை அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் 150ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றினர்.
அத்துடன் அன்று மாலை இளையோருக்கான பாதுகாப்பான குடிபெயர்வு மற்றும் தொழில்வாய்ப்பு வழிகாட்டலை உள்ளடக்கிய விழிப்புணர்வு கருத்தமர்வு இடம்பெற்றதுடன் இக்கருத்தமர்வை யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன பணியாளர்கள் நெறிப்படுத்தினர்.

