தவக்காலத்தை முன்னிட்டு பாண்டியந்தாழ்வு புனித அன்னாள் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 33 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

