யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பு உறுப்பினருக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை திருவுளப்பணியாளர் சபை இல்லத்தில் நடைபெற்றது.
அமைப்பின் ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆன்மீக உரை ஒப்புரவு அருட்சாதனம், நற்கருணை வழிபாடு, திருப்பலி என்பன நடைபெற்றன.
ஆன்மீக உரையையும் திருப்பலியையும் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்கள் முன்னெடுத்ததுடன் நற்கருணை வழிபாட்டை திருவுளப்பணியாளர் சபை அருட்தந்தை மரியதாஸ் அவர்களும் நெறிப்படுத்தினார்.
தொடர்ந்து அமைப்பின் அங்கத்தவர்களுக்கான கூட்டம் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் 30 வரையானவர்கள் பங்குபற்றினர்.

