புலோப்பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை பங்குனி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்சிலுவைப்பாதை புலோப்பளை புனித இராயப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி வண்ணாங்கேணி இரக்கத்தின் மாதா ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.
அத்துடன் புலோப்பளை பங்கு பாடசாலை மாணவர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 25ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் தியான உரை, நற்கருணை வழிபாடு, திருப்பலி என்பன நடைபெற்றதுடன் தியானத்தை குணேலியன் சபை அருட்தந்தையர்கள் டேவிட் மற்றும் பிலோமின் ராஜ் ஆகியோர் நெறிப்படுத்தினர்.
இத்தியானத்தில் 50 மாணவர்கள் பங்குபற்றினர்.

