உருத்திரபுரம் பங்குமக்களுக்கான தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குமக்கள் பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற செபமாலை, சிலுவைப்பாதை, நற்கருணை வழிபாடு, திருப்பலி என்பவற்றில் பங்குபற்றினர்.

நற்கருணை வழிபாட்டை அருட்தந்தை டினேசன் அவர்கள் நெறிப்படுத்தியதுடன் திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் 150 வரையான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin