சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானம் சுன்னாகம் புனித அந்தோனியர் ஆலயத்தில் ஆரம்பமாகி சூராவத்தை புனித திரேசாள் ஆலயத்தின் ஊடாக ஏழாலை புனித இசிதோர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.
திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

