சாவகச்சேரி மற்றும் அக்கராயன் பங்குமக்களுக்கான தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை ஞானேந்திரன் மற்றும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் பங்குமக்கள் வவுனியா கோமரசன்குளம் கல்வாரி திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற சிலுவைப்பாதை, திருப்பலி, நற்கருணை வழிபாடு, என்பவற்றில் பங்குபற்றினர்.
அருட்தந்தை ஞானேந்திரன்; அவர்கள் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் இந்நிகழ்வில் 400 வரையான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

