யாழ்ப்பாணம் திருவுள சபை அங்கத்தவர்கள் இணைந்து முன்னெடுத்த திருவுள சபை திருவிழா பங்குனி மாதம் 25ஆம் திகதி கடந்த புதன்கிழமை கொழும்புத்துறை திருவுள சபை சிறிய குருமடத்தில் குருமட அதிபர் அருட்தந்தை மரியசெல்வன் பிராங் டவ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை கொழும்புத்துறை பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இத்திருப்பலியில் திருவுளப்பணியாளரின் யாழ். வட்டார குருக்கள், மணத்துறவு ஆண்கள் மற்றும் திருமணமான தம்பதிகள் கலந்துசெபித்தனர்.
குருக்கள், மணத்துறவு ஆண்கள் மற்றும் திருமணமான தம்பதிகளை அங்கத்தவர்களாக கொண்ட திருவுள சபை கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருவிழாவை தங்களுடைய திருவிழாவாக கொண்டாடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

