கிளிநொச்சி பல்லவராயன்கட்டு ஆங்கிலப் பாடசாலை இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி பங்குனி மாதம் 19ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் மாணவர்கள் ஒக்ஸ்போர்ட், ஸ்ரான்போர்ட், ஹவார்ட், கேம்பிரிட்ஜ் என நான்கு இல்லங்களாக பிரிந்து போட்டிகளில் பங்குபற்றியதுடன் நடைபெற்ற போட்டிகளில் கேம்பிரிட்ஜ் இல்லம் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.

திரு. ஜோர்ஜ் கிறிஸ்தோபர் அவர்கள் பிரதம விருந்தினராகவும் பூநகரி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. கலைச்செல்வன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜெயபுரம் இராணுவ அதிகாரிகள், அயற் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்களென பலரும் பங்குபற்றினர்.

By admin