புங்குடுதீவு பங்கு மறைப்பாடசாலை மாணவர்களின் காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 27ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கரந்தலி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் மறைக்கல்வி மாணவர்களால் “இயேசுவின் கல்வாரிப்பாடுகள்” எனும் தொனியில் சிலுவைப்பாதை நிலைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
தியான நிறைவில் திருப்பலி இடம்பெற்றதுடன் திருப்பலியை யாழ். அகவொளி குடும்பநல நிலைய உதவி இயக்குநர் அருட்தந்தை ஜெராட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

