திருகோணமலை மறைமாவட்ட வருடாந்த பொதுச்சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நாச்சிக்குடா திருச்சிலுவை கல்வாரி மலையில் நடைபெற்றது.
சீனக்குடா பங்குத்தந்தை அருட்தந்தை தேவசீலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இத்தியானத்தில் சிலுவைப்பாதையும் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றன.
திருப்பலியை ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இத்தியானத்தில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

