பளை பங்கின் இத்தாவில் புனித பார்பரா அன்னை ஆலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பங்கு மக்களால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வுகள் பங்குனி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பளை பிரதேச மருத்துவமனையிலும் தை மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி வேம்பொடுகேணி தமிழ் கலவன் பாடசாலையின் விளையாட்டு மைதானம் மற்றும் பாடசாலை வீதியிலும் நடைபெற்றன.

அத்துடன் மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்ற சிரமதான முடிவில் நோயாளர்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

யாழ். மறைமாவட்டத்தில் புனித பார்பரா அன்னையின் பெயரில் அமைந்துள்ள ஒரேயொரு ஆலயமாகிய இவ்வாலயத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் அப்பணிகளை முன்னெடுப்பதற்கான நிதியனுசரணையை இப்பங்கு மக்கள் நல் உள்ளம் கொண்டவர்களிடம் எதிர்ப்பார்த்து நிற்பதாகவும் பங்குத்தந்தை அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin