ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் 40ஆவது ஆண்டு 2027ஆண்டில் சிறப்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஆன்மீக தயார்ப்படுத்தலாக இவ்வாண்டு பணியகத்தின் நற்கருணை ஆண்டாக பிரகடணப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட நற்கருணை மாநாடு பங்குனி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை எசன் மாநகரில் நடைபெற்றது.
பணியக இயக்குநர் அருட்தந்தை நிருபன் தார்சீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெகன்குமார் கூஞ்ஞ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் நற்கருணை வழிபாடு, கருத்துரைகள், திருப்பலி என்பன இடம்பெற்றன.
கருத்துரைகளை அருட்தந்தை ஜெகன்குமார் கூஞ்ஞ அவர்கள் “நற்கருணையின் விவிலிய பின்ணணி” என்னும் தலைப்பிலும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா சகாயதாசன் அவர்கள் “நற்கருணையின் வழிபாட்டியல்” என்னும் தலைப்பிலும் அருட்தந்தை நிதர்சன் பிரான்சிஸ் அவர்கள் “நற்கருணை ஆன்மீகம்” என்னும் தலைப்பிலும் வழங்கியிருந்தனர்.
இம்மாநாட்டில் 300ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றினர்.

