யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் சபையின் தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சபை அங்கத்தவர்கள் புதுக்குடியிருப்பு மந்துவில் திருமுக ஆண்டவர் ஆலயத்திற்கு யாத்திரை மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற திருச்செபமாலை, சிலுவைப்பாதை, ஒப்புரவு அருட்சாதனம், நற்கருணை ஆராதனை, திருப்பலி என்பவற்றில் பங்குபற்றினார்கள்.

திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் நற்கருணை வழிபாட்டை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை விஜேந்திரன் அவர்களும் நெறிப்படுத்தினார்.

வழிபாடுகளின் நிறைவில் சபை அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடலும் கலந்துரையாடலும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் பந்திகளின் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இவ்யாத்திரையில் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 480ற்கும் அதிகமான அங்கத்தவர்கள் மற்றும் அருட்சகோதரிகள் பங்குபற்றியிருந்தனர்.

By admin