சமூகதொடர்பாடல் ஆண்டு சிறப்பு நிகழ்வாக மணற்காடு பங்குமக்களுக்கான நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் பற்றிய சிறப்பு கருத்தமர்வு பங்குனி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் கலந்து காலை திருப்பலியை ஒப்புக்கொடுத்து திருப்பலி நிறைவில் கருத்தமர்வை வழிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் 100ற்கும் அதிகமான பங்குமக்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

