யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் ரீசேட் அறிமுக நிகழ்வு பங்குனி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் திரு. கு. லெனின்குமார் அவர்களின் தலைமையில் பாடசாலை ஜோண் பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பழைய மாணவர்கள் 150வது ஆண்டு பொறிக்கப்பட்ட ரீசேட்டை அறிமுகம் செய்து வைத்ததுடன் யாழ். புனித மரியன்னை பேராலய உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்கள் கலந்து ஆசியுரையையும் வழங்கினார்.
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பாடசாலையின் பழைய மாணவர் திரு. செபமாலை அன்ரன் யூட் மற்றும் கனடா நாட்டில் வசிக்கும் பாடசாலையின் பழைய மாணவர் திரு. கந்தையா தாசன் ஆகியோர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகளென பலரும் பங்குபற்றினர்.

