சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்களால் “கல்வாரி நாயகனோடு ஒரு பணயம்” என்னும் தலைப்பில் சிலுவைப்பாதை நிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு தொடர்ந்து யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் திருப்பலியும் நடைபெற்றது.
காட்சி சிலுவைப்பாதையை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் திரு. பிரபா அவர்கள் நெறிப்படுத்தினார். இத்தியானத்தில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

