உருத்திரபுரம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள், இளையோர், தந்தையர்களால் மேடையேற்றப்பட்ட “சிலுவை பேசும் அன்பு” திருப்பாடுகளின் தியானக்காட்சி பங்குனி மாதம் 15ஆம் திகதி ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 60 கலைஞர்களின் பங்குபற்றுதலோடு மேடையேற்றப்பட்ட இவ்வாற்றுகையை யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர் திரு. ஜெகன் கரன்சன் அவர்கள் நெறியாள்கை செய்தார்.
இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

