யாழ். போதனா வைத்தியசாலை ஆன்மீக குழுமத்தினரின் தவக்கால யாத்திரையும் தியானமும் பங்குனி மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அமல மரித்தியாகிகள் சபை அருட்தந்தை டினுசன் பியூமால் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குழும அங்கத்தவர்கள் மணியந்தோட்டம் கர்த்தர் ஆலயத்தை தரிசித்து அங்கு அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண மறையுரைஞர் குழும அருட்தந்தையர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற நற்கருணை வழிபாடு மற்றும் ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்குபற்றினர்.
தொடர்ந்து புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயத்தை தரிசித்து அங்கு நடைபெற்ற சிலுவைப்பாதை தியானத்தில் பங்குபற்றியதுடன் கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயம், வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலயத்தையும் பார்வையிட்டனர்.
இத்தியானத்தில் வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய மாணவர்கள், தன்னார்வ பணியாளர்களென 50 வரையானவர்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

