நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் பங்குனி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை புனித பேதுரு பவுல் ஆலயத்திலும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சின்னமடு செபமாலை மாதா ஆலயத்திலும் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானங்களில் திருப்பலி, ஒப்புரவு அருட்சாதனம், தியான உரை, குணமாக்கல் வழிபாடு என்பன நடைபெற்றன.
இத்தியானத்தை யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை மறையுரைஞர் குழும அருட்தந்தையர்கள் நெறிப்படுத்தியதுடன் இவ்வழிபாடுகளில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

