முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை அல்வின் கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் கருத்துரை, சிலுவைப்பாதை, நற்கருணை வழிபாடு, தலைமைத்துவ பயிற்சி, சமூக தொடர்பாடல் விழிப்புணர்வு கருத்தமர்வு என்பன நடைபெற்றன.
கருத்துரை மற்றும் சிலுவைப்பாதை தியானத்தை அமதித்தென்றல் உள ஆற்றுப்படுத்தல் நிலைய இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை விஜேந்திரன் அவர்களும், நற்கருணை ஆராதனையை அருட்சகோதரர் ஹில்ரன் அவர்களும் தலைமைத்துவ பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தமர்வை இளையோர் ஆணைக்குழு வளவாளர்களும் நெறிப்படுத்தினர்.
இத்தியானத்தில் 120 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

