யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 18ஆம் திகதி புதன்கிழமை போயிட்டி புனித லூர்து அன்னை ஆலயத்திலும் 16ஆம் திகதி திங்கட்கிழமை நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலயத்திலும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குமிழமுனை தூய ஆவியார் ஆலயத்திலும், நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் வழிநடத்தலில் தவைலர் செல்வன் நிராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் செல்வன் கட்சன் பிராங்க் விதுசன் அவர்களின் நெறியாள்கையில் “சிலுவையோடு பயணம்” எனும் மையக்கருத்தில் சிலுவைப்பாதை நிலைகள் இளையோரால் காட்சிப்படுத்தப்பட்டு தியானம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin