நாவாந்துறை பங்கின் குருசடித்தீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

18ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை சல்வற்றோறியன் சபை அருட்தந்தை மைக்கல்ராஜா பிரபு அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin