பருத்தித்துறை – புலோலி புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 18ஆம் திகதி புதன்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணை விழாத்திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை றோய் அலோசியஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

