மன்னார் மறைமாவட்ட வவுனியா மறைகோட்டத்தைச் சேர்ந்த மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பம்பைமடு இறை இரக்க திருத்தலத்தில் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி மற்றும் கல்வி ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்தந்தை கிருசாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் சிலுவைப்பாதை, திருப்பலி, நற்கருணை வழிபாடு என்பன இடம்பெற்றன.

திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இத்தியானத்தில் 100ற்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்குபற்றினர்.

By admin