பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா பரிபாலகர் அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.
04ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
இவ்வழிபாடுகளில் 6000ற்கும் அதிகமான பக்தர்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

