யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான விடுமுறை கால சிறப்பு நிகழ்வு மாசி மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல்நாள் நிகழ்வில் நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் பற்றிய சிறப்பு கருத்தமர்வும் இரண்டாம் நாள் கணினி பாவனை தொடர்பான பயிற்சியும் இறுதி நாளன்று காலச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
தொடர்பாடல் கருத்தமர்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் ஆகியோர் கலந்து கருத்துரைகள், குழு ஆய்வுகள், கலந்துரையாடல், விழிப்புணர்வு பட காட்சி என்பவற்றின் ஊடாக அருட்சகோதரர்களை வழிநடத்தியதுடன் திரு. வில்சன் அவர்கள் கணிணி பயிற்சியையும் வழிப்படுத்தினார்.

