யாழ். மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய வலுவூட்டல் அமைதி தியானம் மாசி மாதம் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “அன்பிய வாழ்வியலை கிறிஸ்துவிற்குள் ஆழப்படுத்துவோம்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இத்தியானத்தில் திருப்பலி, நற்கருணை வழிபாடு, அனுபவ பகிர்வு, கருத்துரைகள் என்பன இடம்பெற்றன.

