முல்லைத்தீவு மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் மாசி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

மறைக்கோட்ட மறையாசிரியர் இணைப்பாளர் அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம் என்பவற்றுடன் தொடர்பாடல் ஆண்டு கருத்தமர்வும் நடைபெற்றது.

தவக்கால தியானத்தை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிறாஜ் அவர்கள் வழிநடத்தியதுடன் தொடர்பாடல் ஆண்டு கருத்தமர்வை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் வழிநடத்தினார்.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்குகளைச் சேர்ந்த 100 வரையான மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin