சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அந்தோனியார் பாலர் பாடசாலை திறப்புவிழா மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுன்னாகம் பங்குத்தந்தையும் முன்பள்ளி காப்பாளருமான அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து முன்பள்ளியை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் மற்றும் வலிகாம வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ஜமுனா ராஜசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

