யாழ்ப்பாண கிறிஸ்தவ ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான சிறப்பு நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன.

யாழ். பரிசுத்த பேதுரு மெதடிஸ்த ஆலயத்தில் மாசி மாதம் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான அமர்வில் இந்தியாவிலிருந்து வருகைதந்த தென்னிந்தியத் திருச்சபையின் சென்னைப் பேராய அருட்பணியாளர் பிரான்சிஸ் ஞானசுந்தரமணி அவர்கள் கலந்து “ஓர் உடல், பல காயங்கள், ஒரு நம்பிக்கை: நமது காலத்தில் கிறிஸ்தவ ஒற்றுமைக்கான அழைப்பு” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் அங்கிலிக்கன் திருஅவை, மெதடிஸ்த திருஅவை, தென்னிந்திய திருஅவை என்பவற்றின் அருட்பணியாளர்கள், இறைமக்களுடன், கத்தோலிக்க திருஅவையின் அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளும் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் மருதனார்மடம் “கிறிஸ்த சேவ” ஆச்சிரமத்தில் ஆச்சிரம தலைவர் ஜெரோம் அண்ணன் தலைமையில் மாசி மாதம் 11ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற கதாப்பரசங்கம் நிகழ்வில் அருட்பணியாளர் பிரான்சிஸ் ஞானசுந்தரமணி அவர்கள், பழைய ஏற்பாட்டில் குலமுதுவர் யாக்கோபின் மீது கடவுள் அருள்மழை பொழிந்த நிகழ்வை கர்நாடக இசையோடிணைந்த பாடல்கள் வழியாக விரித்துரைத்தார்.

இந்நிகழ்வில் ஆச்சிரம அன்பர்கள் அருட்பணியாளர்களென பலரும் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin