யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் காட்சி சிலுவைப்பாதை தியானம் மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்திலும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலயத்திலும் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின்; வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் இளையோரால் “சிலுவையோடு பயணம்” எனும் மையக்கருத்தில் சிலுவைப்பாதை நிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு தியானம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

