யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட உரும்பிராய் பங்கு மற்றும் இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களுக்கான தவக்கால தியானம் மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உரும்பிராய் பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், நற்கருணை வழிபாடு, தலைமைத்துவ பயிற்சி, சமூக தொடர்பாடல் விழிப்புணர்வு கருத்தமர்வு என்பன நடைபெற்றன.

நற்கருணை ஆராதனையை செபமாலைதாசர் சபை அருட்தந்தை ராஜசேகர் அவர்களும், தலைமைத்துவ பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தமர்வை இளையோர் ஆணைக்குழு வளவாளர்களும் நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ், இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாசன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் 30 வரையான இளையோரும் பங்குபற்றியிருந்தனர்.

By admin