மன்னார் மறைமாவட்டம் வவுனியா மகாறம்பைக்குளம் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யூட் ஞானராஜ் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மகாறம்பைக்குளம் புனித மடுமாதா ஆலயத்தில் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 52 பிள்ளைகள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

திருப்பலி நிறைவில் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட புனித லூர்து அன்னையின் கெபி ஆயர் அவர்களால் ஆசிர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.

By admin