யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொது பட்டமளிப்பு விழாவில் யாழ் மறைமாவட்ட குருவும் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநருமான அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொது பட்டமளிப்பு விழா மாசி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது.
பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் குமாரவடிவேல் அவர்களின் தலைமையில் நாளைய தினம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை 12 அமர்வுகளாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் 3252 மாணவர்கள் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.
இப்பட்டமளிப்பு நிகழ்வில், அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் கிறிஸ்தவ நாகரீகத்துறையில் “திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அவர்களின் மனிதநேயம் ஒர் இலங்கை பயன்பாடு” என்ற தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு கலாநிதிப் பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

