யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் மேடையேற்றப்படவுள்ள திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு மாசி மாதம் 18ஆம் கடந்த புதன்கிழமை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைஞானசுரபி தியான இல்லத்தில் நடைபெற்றது.

மன்ற பிரதி இயக்குனர் திரு. ஜோண்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை கரவையூர்ச் செல்வம் செல்வரட்ணம் அவர்கள் கலந்து ஆசியுரை வழங்கி ஆற்றுகையில் பங்கேற்கவுள்ள கலைஞர்களுக்கான பிரதிகளை வழங்கிவைத்தார்.

இவ்வாண்டு திருப்பாடுகளின் ஆற்றுகை ‘காவிய நாயகன்” என்னும் பெயரில் எதிர்வரும் பங்குனி மாதம் 26ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை மாலை 6.45 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் பிரமாண்டமான காட்சியமைப்புடன் மேடையேற்றப்படவுள்ளது.

“காவிய நாயகன்” திருப்பாடுகளின் காட்சி திருமறைக்கலாமன்ற ஸ்தாபக இயக்குநர் அமரர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களால் எழுதப்பட்டு அவரது நெறியாள்கையில் முதன் முதலாக 2001ஆம் ஆண்டிலும் தொடர்ந்து 2004, 2008, 2013, 2022ஆம் ஆண்டுகளிலும் மேடையேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டதுடன் தற்பொழுது 6ஆவது தடவையாக மேடையேற்றப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin